அழிந்துவரும் கடல் பறவைகள் – சிங்கப்பூரில் தாய்ப்பறவை தனது குஞ்சுகளுக்கு உணவளிக்கும் தருணத்தை படம்பிடித்த புகைப்படக் கலைஞர்

endangered sea birds spot at singapore seashore hatched chicks

பரந்து விரிந்த கடல்களிலும் ,கடற்கரைகளிலும் பெரும்பான்மையாக வாழக்கூடிய Black- Nape Tern வகைப் பறவைகள் சிங்கப்பூரில் காணப்பட்டதாக புகைப்படக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஜோகூர் ஜலசந்தி மற்றும் புலாவு உபின் மற்றும் புலாவு டெக்காங் நீரில் மட்டுமே காணமுடியும் என்று கூறினர்.

சிங்கப்பூரில் தனியாக இருந்த கடற்கரை பாறையில் புதிதாக பொரித்த தங்கள் குஞ்சுகளை பராமரித்து அவைகளுக்கு உணவு வழங்குவதில் மும்முரமாக இருந்தது தாய்ப்பறவை. சிங்கப்பூரில் அதிகம் அறியப்படாத பறவை வகைகளை மிகவும் எதார்த்தமான நிலையில் படம் பிடிக்க முடிந்தது அதிர்ஷ்டம் என்று புகைப்பட கலைஞர்கள் கூறுகின்றனர்.

Tern வகை பறவைகளின் குஞ்சுகள்,முட்டையை உடைத்து உலகத்தை எட்டிப் பார்த்து ஒரு வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில் அவற்றின் இறகுகள் கிரானைட் பாறைகளைப் போல தோற்றமளிக்கும்.கடற்கரை பாறையைச் சுற்றி நீர் சூழ்ந்திருக்கும் நிலையில் , குஞ்சுகளை பாதுகாக்கவும் உணவளிக்கவும் பெற்றோர் பறவைகள் முயற்சி செய்கின்றன.

தாய் பறவை ஒன்று தான் பொரித்த குஞ்சுகளுக்கு நெத்திலி மீனை ஊட்டும் அழகான தருணத்தை புகைப்படக் கலைஞர் Derek Yeo தனது கேமராவில் படம் பிடித்துள்ளார். Tern குஞ்சு தனது உணவைப் பெறுவதற்காக அதன் அலகை அகலமாக திறந்து மீனைப் பிடித்துக் கொள்ளும் வகையில் முன்னேறுகிறது. பின்னர் மீனை முழுவதுமாக விழுங்குகிறது.

சுமார் நான்கு முதல் எட்டு சென்டிமீட்டர் நீளமுள்ள சிறிய அளவிலான மீன்களை Black – Nape Tern பறவைகள் உண்ணும். இவை பெரும்பாலும் கடற்கரை பாறை அல்லது நிலப்பரப்பில் உள்ள பாறைகளில் நேரடியாக முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இந்த வகை பறவைகள் சிங்கப்பூரின் அசாதாரண குடியிருப்பாளர்கள் என்று சிங்கப்பூர் பறவைகள் அமைப்பு கூறுகிறது.