நச்சு கலந்த உணவு காரணமாக 26 பேர் பாதிப்பு – உணவகத்தின் உரிமம் தற்காலிக ரத்து!

Eng's Heritage suspended food
(Photo: ENG's Wantan Noodle/Facebook)

நச்சுணவு தொடர்பாக சந்தேகிக்கப்படும் நிலையில், Northpoint City மாலில் உள்ள Eng’s Heritage உணவகத்தில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) மற்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

ஜனவரி 7 முதல் 9 வரை அங்கு உணவை உட்கொண்ட பிறகு, 26 பேருக்கு உடற்பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

தங்கும் விடுதி தொற்று: இந்தியாவிலிருந்து வந்த கட்டுமானத் துறை ஊழியருக்கு புதிய பாதிப்பு

ஐந்து பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் சீரான நிலையில் உள்ளனர், ஒருவர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து திரும்பினார்.

இடைநிறுத்தப்பட்ட உணவகத்தில் பணிபுரியும் அனைத்து உணவுத் தயாரிப்பாளர்களும், மீண்டும் பணியைத் தொடங்குவதற்கு முன்பு அடிப்படை உணவு சுகாதாரப் பயிற்சியில் மீண்டும் கலந்துகொண்டு தேர்ச்சி பெற வேண்டும் என்று MOH மற்றும் SFA தெரிவித்துள்ளன.

உபகரணங்கள் மற்றும் பாத்திரங்கள் உட்பட உணவகத்தின் அனைத்தையும் சுத்தம் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பொது சுகாதார சட்டத்தை மீறியதாக கண்டறியப்பட்ட எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று SFA தெரிவித்துள்ளது.

கவனக்குறைவாக லாரியை ஓட்டி, பாதசாரி மீது மோதிய ஓட்டுநர் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…