எஸ்கலேட்டரில் பொருத்தப்பட்ட கிருமிநாசினி கருவியில் சிக்கிய சிறுமியின் கை… திடீரென சிக்கியதாக புகார்

hand-Asia-Square-Tower-1
Shin Min Daily News

ஏசியா ஸ்கொயர் டவர் (Asia Square Tower) 1 எஸ்கலேட்டரில் பொருத்தப்பட்டிருந்த கிருமிநாசினி கருவியில் (disinfecting device) சிறுமி ஒருவரின் கை சிக்கி காயம் ஏற்பட்டது.

சிறுமியின் கையை அந்த கருவியிலிருந்து வெளியே எடுக்கும்போது, அவருடைய கை மற்றும் விரலின் பின்புறத்தில் உள்ள தோல் கிழிந்து காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ரகசிய கேமரா மூலம் பெண்ணை தவறான வீடியோ எடுத்த ஆடவர்… சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவு

ஐந்து வயது நிரம்பிய அந்த சிறுமி தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் ஜூலை 3ஆம் தேதி அங்கு சென்றுள்ளார்.

அதாவது மெரினா பேயில் உள்ள சில்லறை மற்றும் அலுவலக கட்டிடத்தில் இரவு உணவு சாப்பிட தனது குடும்பத்துடன் அவர்கள் வெளியே சென்றதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

கிருமிநாசினி கருவி எஸ்கலேட்டர் கைப்பிடியின் இருபுறமும் உள்ளது. இருப்பினும் சிறுமி விளையாட்டு தனமாக அதில் ஏதும் செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது சிறுமி அந்த கைப்பிடியைப் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், திடீரென அதில் சிறுமியின் கை மாட்டிக்கொண்டதாகவும் அவரின் தாயார் கூறியுள்ளார்.

இது குறித்த விசாரணைகள் நடந்து வருவதாகவும், தற்போது இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

“உயிரிழந்த ஊழியர்களுக்கு 2 வருட அனுபவம் உள்ளது…” MOM கூற வரும் செய்தி என்ன?