அனைத்து HDB குடியிருப்பு கார் பார்க்கிங்களிலும் 12,000 மின்-வாகன சார்ஜிங் அமைப்புகள்!

S Iswaran/Facebook

சிங்கப்பூரில் உள்ள அனைத்து HDB குடியிருப்பு கார் பார்க்கிங்களிலும் குறைந்தது 12,000 மின்னணு வாகன (EV) சார்ஜிங் அமைப்புகள் நிறுவப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

இது வரும் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும் எனவும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று (நவம்பர் 2) அறிவித்தது.

பதில் தவறாக சொன்னதற்காக 8 வயது மாணவியை அடித்து தாக்கிய ஆசிரியர் – 4 நாள் சிறை

அதாவது இதற்காக ஐந்து முன்னணி நிறுவனங்களுக்கு டெண்டரை LTA வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் முழுவதும் ஏறக்குறைய 2,000 HDB கார் நிறுத்துமிடங்களை உள்ளடக்கிய இந்த சார்ஜிங் அமைப்புகளை நிறுவப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த நிறுவுதல் பணிகள் முடிந்ததும், ஒவ்வொரு HDB வட்டாரமும் மின்னணு வாகனத்துக்கு தயாரான பகுதியாக இருக்கும் என்று LTA தெரிவித்துள்ளது.

யுஷுனில் 3 வாகன விபத்து: சிறுமி உட்பட மூவர் மருத்துவமனையில் அனுமதி