எவர்-க்ரீன் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் – மாணவர்கள் வீட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்டனர் !

evergreen school

உட்லண்ட்ஸில் உள்ள எவர்கிரீன் மேல்நிலைப் பள்ளிக்கு ஜூலை 21 அன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது, இதனால் வளாகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இன்று அதிகாலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீசாருக்கு  பள்ளி தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டதாக கல்வித்துறை அமைச்சர் Chan Chun Sing தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

போலீசார் பள்ளிக்கு வந்து வளாகத்தை ஆய்வு செய்தனர், அதில் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், பள்ளி ஊழியர்களும் மாணவர்களும் அமைதியாக வெளியேறினர். மேலும் “Parents Gateway” வழியாக தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் ஏற்கனவே இருந்த மாணவர்களை வீட்டிற்கு திரும்ப  அனுப்பியுள்ளனர். சிங்கப்பூரின் கல்வி அமைச்சகம் மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு அச்சுறுத்தலையும் அல்லது செயலையும் பொறுத்துக்கொள்ளாது என கல்வித்துறை அமைச்சர் சான் கூறியுள்ளார்.