கற்கை நன்றே! – ஒவ்வொரு சிங்கப்பூரரும் எந்த நேரத்திலும் கல்வி கற்றுக்கொள்ளும் திட்டம் குறித்துப் பேசிய கல்வித்துறை அமைச்சர்

(photo: mothership)
கல்வி யாராலும் அழிக்க முடியாத நிலையான செல்வம் என்பதால் உலகின் பல்வேறு நாடுகளும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
இந்நிலையில் ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் எந்த நேரத்திலும் பலனுள்ளவற்றைக் கற்றுக்கொள்ள உதவும் கருவிகள் கிடைக்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் சான் கன் சிங் வலியுறுத்தியுள்ளார்.நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி கற்க வேண்டும் என்று கூறிய அவர்,சான்றாக நவீன கைப்பேசிகளை குறிப்பிட்டார்.

சிங்கப்பூரர்கள் படிப்புகளை முடித்து பின்னர் தொடர்ந்து போட்டித்திறனுடன் திகழ்வதை உறுதிபடுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் புதிய உத்தி பற்றியும் அவர் விளக்கினார்.
குடும்ப பொறுப்புகள் மற்றும் பணப்பிரச்சினைகள் போன்றவற்றை சிங்கப்பூரகள் எதிர்கொள்வார்கள் என்பதே இதற்க்குக் காரணமாகும்.எந்தெந்த வழிகளில் போட்டித்திறனை உறுதிபடுத்தும் முயற்சிகளை முடுக்கி விடுவது என்பது பற்றி அடுத்த வரவுசெலவுத் திட்டத்தின் போது அறிவிப்புகள் வெளியாகும்.
மாணவர்கள் அவர்களது 15 ஆண்டுகால பள்ளிப்பருவ காலத்தில் பேணி உருவாக்குவது,பள்ளிக்குப் பிறகு அடுத்த 50 ஆண்டுகளில் மேலும் அவர்களை வளர்ச்சியடையச் செய்வது தான் அந்த உத்தி என்று கூறினார்.
சிங்கப்பூர் அரசாங்கம் சமூகத்துடன் இணைந்து மேலும் பல முயற்சிகளை இந்த வழியில் செய்ய விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.