கட்டுமானத் தளத்தில் இயந்திரத்தின் ஒரு பகுதி விழுந்ததில் வெளிநாட்டு ஊழியர் மரணம்

(Photo: Google map)

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில், நிலம் தோண்டும் இயந்திரத்தின் ஒரு பகுதி விழுந்ததில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

37 வயதான பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த அந்த ஊழியர், நேற்று முன்தினம் கான்கிரீட் பிரேக்கர் இணைப்புடன் பொருத்தப்பட்ட இயந்திரத்தை பயன்படுத்தி சில எஃகு சட்டங்களை தூக்க தனது சக ஊழியருக்கு உதவியுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி!

அப்போது இந்த விபத்து நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

உபி (Ubi) சாலை 3 மற்றும் உபி அவென்யூஸ் 1 மற்றும் 2க்கு அருகிலுள்ள வேலையிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அன்று மாலை 4.17 மணியளவில் தொழில்துறை விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த ஊழியர் சாங்கி பொது மருத்துவமனைக்கு மயக்க நிலையில் கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், காவல்துறை எந்தவிதமான சதி செயலையும் இதில் சந்தேகிக்கவில்லை.

இந்த ஊழியர் ரைட் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற கட்டிடம் மற்றும் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் MOM விசாரித்து வருகின்றன.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பயணிகளில் இவர்களுக்கு சிங்கப்பூர் வரத் தடை