தீவிர பயிற்சியில் சிங்கப்பூர், அமெரிக்க ராணுவம் – எதற்கு பயிற்சி நடவடிக்கை?

Singapore Army (Photo: MINDEF)

சிங்கப்பூர் ராணுவம்,அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் “EXCERSISE TIGER BOMB 2022″ என்ற ஒருங்கிணைந்த நகர்ப்புற பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 6-ஆம் தேதி முதல் இன்று வரை முராய் நகர பயிற்சி மையத்தில் ,பயிற்சி நடவடிக்கை நடைபெறுகிறது.இந்த பயிற்சி நடவடிக்கை இருநாட்டு ரானுவங்களுக்கும் இடையில் நீண்ட காலமாக நடத்தப்பட்டு வருகிறது.”EXCERSISE TIGER BOMB” முதன்முறையாக 1981-இல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த பயிற்சியானது இரண்டு ஆண்டுகள் கோவிட் தொற்றுக்கு பிறகு முதல்முறையாக நேரடியாக நடத்தபடுகிறது.2019-இல் நடைபெற்ற நேரடி பயிற்சியில் 700-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.பின்னர் கோவிட் தொற்று காரணமாக 2020-ஆம் ஆண்டு இந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டது.எனவே,மெய்நிகர் வாயிலாக கடந்த ஆண்டு பயிற்சி நடத்தப்பட்டது.

சிங்கப்பூர் அமெரிக்க ராணுவப் படைகள் நிபுணத்துவ பரிமாற்றத் திட்டங்கள் மூலம் பயிற்சி நடவடிக்கைகளிலில் ஈடுபடுகின்றன.ஒரு நாட்டின் பாதுகாப்பு அந்நாட்டின் ராணுவ பலம் மற்றும் ஆயுத பலம் ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.தீவிரவாத ஊடுருவல், அந்நிய நாடுகளின் படையெடுப்பு ஆகியவற்றிலிருந்து தேசத்தை பாதுகாக்க ராணுவ வீரர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும்.இரண்டு நாடுகளும் இதைத்தான் செய்கின்றன.