விரைவுச் சாலையில் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு நேர்ந்த அனுபவம் – இப்படியும் சிலர்

Photo: Mothership

சமீபத்தில் விரைவுச் சாலையில் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு நேர்ந்த அனுபவத்தைப் பற்றி அவர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

என்ன நடந்தது?

அவர் கடந்த நவம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கியதாக பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் சிறிய விபத்தில் சிக்கியதாகவும், அந்த ஒரு நிமிடத்திற்குள் இரண்டு பேர் சம்பவ இடத்துக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

விபத்தில் சிக்கிய இரு தரப்பினரும் மறுத்த போதிலும், தங்கள் உதவியை செய்வதில் அவர்கள் மிகவும் பிடிவாதமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட பயணத் தடை பட்டியலிலிருந்து சிங்கப்பூர் நீக்கம்!

அதனை அடுத்து, அந்த இரண்டு பேரும் உதவி என்ற பேரில் தன்னையும் இன்னொரு தரப்பினரையும் தொடர்ந்து துன்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

அவர்களில் ஒருவர் தாம் ஒரு மெக்கானிக் என்று அவர்கள் கார்களின் புகைப்படங்களையும் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியிடப்பட்ட இரண்டு புகைப்படங்களின்படி, அந்த நபர்களில் ஒருவர் மஞ்சள் நிற காரில் இருந்து வந்ததாகவும், அதே நேரத்தில் மற்றொரு நபர் இழுவை டிரக்கில் இருந்து வந்ததாகவும் கூறியுள்ளார் அவர்.

தொடர் வாக்குவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, விபத்தில் சிக்கிய தரப்பினர் காவல்துறையை அழைத்ததாக அந்தப் பெண் கூறினார்.

அந்த பெண் காவல்துறையை அழைத்ததாகவும், அப்போது அவர்களின் இரண்டு வாகனங்களும் புறப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “நினைவில் கொள்ளுங்கள், காவலர் தான் நம் நண்பர். சாலை விபத்து மோசடி செய்பவர்கள் நண்பர் இல்லை” என்றும் அவர் கூறியிருந்தார்.

தீபாவளி திருநாளில் நடைபெற்ற நெகிழ்வான சம்பவம்!