சிங்கப்பூரில் இலவச முகக்கவசங்களை பெற 61 முறை மோசடி முயற்சி – ஆடவர் கைது

unauthorised redemption face masks investigated
(Photo: Joshua Lee)

தொடர் மோசடி வழக்குகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 38 வயது ஆடவரை காவல்துறை கைது செய்துள்ளது.

Temasek அறக்கட்டளையின் இயந்திரங்களிலிருந்து சட்டவிரோதமாக தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தி முகக்கவசங்களை பெற்றதாக அந்த ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 100,000 ஊழியர்களுக்கு தடுப்பூசி – இதனால் எல்லைகள் மீண்டும் திறக்கப்படலாம்!

அதாவது, சட்டவிரோதமான முறையில் சுமார் 61 முறை இலவச முகக்கவசங்களை எடுக்க அவர் முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 13ஆம் தேதி காலை 11:40 மணியளவில், பாசிர் ரிஸ் சமூக நிலைய இயந்திரத்தில் இருந்து முகக்கவசங்களை பெறமுடியவில்லை என பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையிடம் புகார் செய்தார்.

விசாரணைகள் மூலமாகவும், இயந்திரங்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் சி.சி.டி.வி கேமராக்களின் உதவியுடனும், பெடோக் காவல் பிரிவு மற்றும் மத்திய காவல் பிரிவு அதிகாரிகள் ஆடவரின் அடையாளத்தை கண்டறிந்தனர்.

அதனை அடுத்து, நேற்று மார்ச் 14 அன்று 24 மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார்.

பொது இடத்தில் ஆபத்தான ஆயுதத்துடன் இருந்த ஆடவர் கைது