சிங்கப்பூரில் தொடரும் சவால்கள் – முகநூலில் ஒளிபரப்பான ஜனாதிபதி ஹலிமா யாக்கோபின் உரை

president halimah yacob said about JSS
(Photo Credit: Nuria Ling/TODAY)
சிங்கப்பூரில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகு படிப்படியாக தொற்றுகள் குறைந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் நாட்டில் தொடர்ந்து சவால்கள் இருக்கவே செய்கின்றன என்று ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் கூறியிருக்கிறார்.அவரது உரை முகநூலில் ஒளிபரப்பானது.

சிங்கப்பூர் முழுவதும் பெரும்பாலான கோவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையும் வைரஸ் தொற்றுடன் மக்கள் வாழப் பழகிக் கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் இஸ்தானா பொதுமக்களுக்கு முழுமையாக திறந்துவிடப் பட்டது.நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இஸ்தானாவில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டதால் பல்வேறு குடும்பங்கள் அங்கு மகிழ்ச்சியாக நேரம் செலவிட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
தொற்று பரவலின் அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதாரச் சிக்கல்கள்,சிங்கப்பூரர்களின் வலிமையான ஒற்றுமை,முதியோர் மக்கள் தொகை,காலநிலை மாற்றம் போன்ற நீண்டகாலக் கடப்பாடுகள் என சிங்கப்பூரை பாதிக்கும் மூன்று முக்கியக் காரணிகளை அதிபர் அவரது உரையில் குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சி மெதுவடையுமானால் உலக நாடுகளின் வரவுச்செலவுத் திட்டங்கள் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.இனம்,சமய பன்முகத்தன்மை சிங்கப்பூரின் வலிமை என்ற போதும் அது தானாக உருவாகவில்லை.மிகுந்த முயற்சி,புரிதல் ஆகியவற்றின் பலனாக விளைந்தது என்பதை அவர் வலியுறுத்தினார்.