சிங்கப்பூரில் Facebook,Tiktok போன்ற சமூகவலைத் தளங்களுக்கு புதிய விதிமுறைகள் – 50% சிங்கப்பூரர்கள் இணையத்தால் பாதிப்பு

சிங்கப்பூரில் புதிய இணைய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்த Facebook,Tiktok,Instagram போன்ற சமூக வலைத்தளங்கள் கூடிய விரைவில் மாற்றங்களை நடைமுறைப் படுத்த வேண்டும். இணையம் மூலம் ஏற்படக்கூடிய தீங்கு காரணமாக சிங்கப்பூருக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல் மற்றும் தொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.

சிங்கப்பூரர்களில் சுமார் 50 சதவீதத்தினர் இணையம் மூலம் விளைவிக்கப்படும் தீங்கினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.பிற மதங்கள், இனங்கள் ஆகியவற்றை வசைபாடும் கருத்துக்களை வலைத்தளங்கள் மூலம் பரப்பி சிங்கப்பூர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றனர்.

இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்த பரிந்துரைக்கப் பட்டுள்ள புதிய விதிமுறைகள் பற்றிய சில விவரங்களை தகவல்தொடர்பு அமைச்சர் Josephin teo அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இணைய பாதுகாப்பை மேம்படுத்த உலகளாவிய நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இணையம் மூலமாக பயனர்களுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்க பல்வேறு நாடுகளில் புதிய சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.இணையப் பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ள நாடுகளுடனும்,புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ள நாடுகளுடனும் சிங்கப்பூர் இணைந்து செயல்படுகிறது.