அட்டையில் ஒரு எடை, உண்மையில் வேறு எடை… NTUC FairPrice பொருளின் அதிக விலையை தோலுரித்து காட்டிய பெண்!

chicken-breast-overpriced-via-ninamonzolevska-on-TikTok
ninamonzolevska on TikTok

சிங்கப்பூரில், தான் வாங்கிய கோழி கறி பாக்கெட்டின் விலை சுமார் 36 சதவீதம் அதிகம் உள்ளதாக பெண் ஒருவர் கண்டுபிடித்து கூறியுள்ளார்.

கோழி கறி பொட்டலத்தில் உள்ள FairPrice Xtra விலை குறிப்பீட்டில் 0.224 கிலோ எடையும், அதற்கான விலை $2.42 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போன சுற்றுலா விமானம்… ஐஸ்லாந்தில் ஏரியின் கீழே கண்டெடுப்பு – பயணம் செய்த பல்வேறு நாட்டவரின் நிலை?

ஆனால், அந்த பெண் தராசில் வைத்து எடை சோதனை செய்தபோது, ​​பொட்டலத்துடன் சேர்த்து வெறும் 0.165 கிலோ எடை மட்டுமே இருந்தது.

அதை அடுத்து, அந்தப் பெண் இதனை பற்றி TikTok இல் பதிவிட்டுள்ளார். “FairPrice doesn’t seem that fair anymore :” என குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது, FairPrice நியாய விலை இனி நியாயமானதாக தோன்றாது, என குறிப்பிட்டு இருந்தார்.

இதுபற்றி FairPrice அறிந்திருப்பதாகவும், தவறாக விலை குறியீடு கொண்ட தயாரிப்புகளுக்கு முழு பணத்தைத் திரும்ப கொடுத்தல் அல்லது பொருளை மாற்றிக்கொடுத்தல் ஆகிய கொள்கையை கொண்டுள்ளதாகவும் அது கூறியது.

கெப்பல் கிளப் நீச்சல் குளத்தில் பெண் மரணம் – மூழ்கி உயிரிழந்தார் என சந்தேகம்