என்னாது…கோழி பொட்டலம் விலை S$72 வெள்ளியா…? சாக் ஆன வாடிக்கையாளர்கள் – விளக்கமளித்த FairPrice

Facebook/NTUC FairPrice

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படும் கோழிக்கு மலேசியா தடை விதித்துள்ளது.

அது ஒருபுறம் இருக்க, NTUC FairPrice சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படும் கோழிக் கறியின் விலை, இங்குள்ள சில கடைக்காரர்கள் மற்றும் நெட்டிசன்களின் புருவங்களை உயர்த்தி பார்க்கும் அளவிற்கு அமைத்துள்ளது. அதாவது அந்த பாக்கெட்டில் விலை S$72.27 வெள்ளியாம்.

இது உண்மை தானா? என்ற கேள்வியுடன் NTUC FairPrice சூப்பர் மார்க்கெட் தான் இதனை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் இந்த புகைப்படம் வலைத்தளங்களில் பரவி வந்தது.

வெளிநாட்டவரை “நாய்”..”உன் நாட்டுக்கு போ” என்று இன ரீதியாக தாக்கிய ஆடவர் இறந்த நிலையில் கண்டெடுப்பு

கடந்த ஜூன் 1, மலேசியாவில் கோழி தடைசெய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, FairPrice லேபிளுடன் கூடிய இந்த “SB ஹோல் சிக்கன்” புகைப்படம் ஆன்லைனில் பரவியது.

இந்நிலையில், இதுபற்றி அறிவதாக NTUC FairPrice சூப்பர் மார்க்கெட் கூறி, அது குறித்து தெளிவுப்படுத்தியுள்ளது.

அந்த தயாரிப்பு, Swiss Butchery நிறுவனத்தால் வளர்க்கப்படும் நாட்டுக்கோழி வகை என்றும், இந்த தயாரிப்பின் விலை $22.50/கிலோ (லேபிளின் பேக் செய்யப்பட்ட தேதி 31 மே 2022 அன்று) என்றும் கூறியுள்ளது FairPrice.

மேலும் 3 கிலோவிற்கும் அதிகமான எடையுடன், 2 முழுப் கோழிகள் அதில் இருந்ததால் அந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக அது கூறியுள்ளது.

ஆகவே, இந்த விளக்கம் விலை பற்றிய தவறான புரிதலை நீக்க உதவும் என்று நம்புவதாகவும் அது கூறியுள்ளது.

காபி கடையில் இளைஞருக்கு சரமாரி வெட்டு… தப்பி ஓடியவரை வளைத்து பிடித்தது போலீஸ்!