மீண்டும் FairPrice விலை லேபிளில் குளறுபடி: விலை லேபிளில் 296கி.. உண்மை எடை 176கி – வைரலான வீடியோ

amk-fairprice-salmon-weight-wrong

NTUC FairPrice சூப்பர்மார்கெட்டில் தவறாக லேபிள் கொண்ட மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது.

அங்கு விற்கப்படும் பிரெஷ் சால்மன் மீன்கள் தவறாக விலை பட்டியல் கொண்டுள்ளதாக ஆன்லைனில் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

வெளிநாட்டில் உயிரிழந்த தமிழக ஊழியர்… கடைசி வரை இருந்து இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமியர்கள்!

அங் மோ கியோவில் உள்ள FairPrice கடையில் நேற்று முன்தினம் பிப்ரவரி 7ஆம் தேதி மீன்கள் விற்கப்பட்டதாக வீடியோ தலைப்பில் கூறப்பட்டுள்ளது.

விலைக் குறியீட்டு அட்டையில், FairPrice Xtra லோகோ உள்ளத்தையும் காணமுடிகிறது, இந்த தயாரிப்பு AMK Hubல் உள்ள கடையில் விற்கப்பட்டதைக் குறிக்கிறது.

இந்த பாக்கெட்டில் உள்ள லேபிலில் 296 கிராம் எடை மற்றும் விலை S$9.15 என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கடையில் உள்ள காய்கறி எடை தராசில் அளவிட்டத்தில், பேக்கேஜிங் உட்பட உண்மையான எடை வெறும் 176 கிராம் மட்டுமே காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த அளவில் மீனின் விலை அதிகபட்சம் S$5.40 ஆக இருக்க வேண்டும்.

இந்த முரண்பாடு காரணமாக மீனின் எடை 68 சதவீதம் அதிகமாக உள்ளது.

இது பற்றி Mothership.sg இன் கேள்விகளுக்குப் பதிலளித்த FairPrice இன் செய்தித் தொடர்பாளர், இது மனிதப் பிழையால் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட தகுதியை இழக்கும் அபாயத்தில் உள்ள 31,500 பேர்!