சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (MOM) மோசடி குறித்த எச்சரிக்கை!!

Please use only the official MOM website at www.mom.gov.sg for all info and transactions on MOM matters ( Photo: MOM)

சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் போலியான இணைய முகவரி புழக்கத்தில் உள்ளதாக MOM தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

http://eponlinemom-sg.com என்ற போலியான இணைய முகவரி புழக்கத்தில் உள்ளது. இதன் மூலம் மோசடி கும்பல் உங்கள் தகவல்களை திருட அதிக வாய்ப்புகள் உள்ளதாக MOM எச்சரித்துள்ளது.

எனவே, சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய முகவரியான www.mom.gov.sg என்பதை, அனைத்து விதமான தகவல்களுக்கும், பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்துமாறு MOM கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், போலியான MOM இணைய முகவரி, அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் குறித்த அடையாளம் மற்றும் அவற்றை ரிப்போட் செய்வதற்கான குறிப்புகள் பெற www.mom.gov.sg/transact-safety-and-security என்ற இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடர்ந்து போலியான இந்த இணைய முகவரி குறித்து கண்காணித்து வருகிறது. அவற்றை முடக்குவதற்கான வேலைகளையும் செய்து வருகிறது.

போலி இணைய முகவரிகளிலிருந்து உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். மேலும், எங்களின் அதிகாரப்பூர்வ இணைய முகவரியை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தரவுகளை பாதுகாத்து கொள்ளலாம், என்று தெரிவித்துள்ளது.