சிங்கப்பூரில் போலி சுவாசக் கருவிகளை ஆன்லைனில் விற்பனை என சந்தேகம் – ஆடவர் கைது

fake respirators man arrested

போலி சுவாசக் கருவிகளை ஆன்லைனில் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 34 வயது ஆடவரை காவல்துறை கைது செய்துள்ளது.

சிங்கப்பூர் காவல் படை (SPF) மற்றும் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) ஆகியவற்றின் கூட்டு செய்திக்குறிப்பில், அந்த ஆடவர் சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளன.

வெளிநாட்டு ஊழியர்கள் விபத்து: 7 ஊழியர்கள் மருத்துவமனையில்… இருவர் ICUவில் சிகிச்சை

இந்த நடவடிக்கைக்கு குற்றவியல் புலனாய்வுத் துறை தலைமை தாங்கியதுடன், சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் உதவி புரிந்தனர்.

அந்த நடவடிக்கையில் சுமார் S$201,000க்கும் அதிக மதிப்புள்ள, 41,000க்கும் மேற்பட்ட போலி சுவாசக் கருவிகள் கைப்பற்றப்பட்டன. அதில் N95 முகக்கவசங்களும் அடங்கும்.

பறிமுதல் செய்யப்பட்ட சுவாசக் கருவிகள் போலியா என்று கண்டறிய தற்போது சோதனைகள் நடத்தப்படுகின்றன.

சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் வசிக்கும் 2 முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு தொற்று!