“ஒரே ஒரு APP தான் Download செய்தேன்.. மொத்த பணமும் Close” – சிங்கப்பூரில் இருப்பவர்கள் உஷார்

downloading fake shopping app to buy drinks
Lianhe Zaobao

சிங்கப்பூரில் ஆன்லைன் மூலம் மலிவான பொருட்களை வாங்க நினைத்த ஒருவர் சுமார் S$199,996 தொகையை இழந்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

56 வயதுமிக்க அந்த பெண்மணி, ஆன்லைன் மளிகை ஸ்டோரில் இருந்து சில மலிவான பானங்களை வாங்க நினைத்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

கார், லாரி மோதி கடும் விபத்து: 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

எங்களிடம் பொருட்களை வாங்க “ஷாப்பிங் ஆப்” ஒன்றைப் பதிவிறக்க வேண்டும் என பெண்மணிக்கு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து அவர் அதனை பதிவிறக்கம் செய்துள்ளார்.

அதை தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து அங்கீகரிக்கப்படாத எட்டு பரிவர்த்தனைகள் நடந்ததாகவும், மொத்தம் S$199,996 தொகையை இழந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

உடனடியாக, அவர் தனது கணக்குகளை முடக்க வங்கிக்கு தகவல் கொடுத்தார், மேலும் போலீசிலும் புகார் செய்தார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் போலீஸ் அல்லது வங்கி விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என Lianhe Zaobao கூறியுள்ளது.

இதுபோன்ற போலி செயலிகளை பதிவிறக்கம் செய்து ஏமாறாதீர்கள். எச்சரிக்கையாகவும் விழிப்போடும் இருங்கள்.

மூன்று லாரிகள் மோதி விபத்து: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவனையில்…

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்