சிங்கப்பூரில் மேலும் ஒரு ஊழியர் மரணம்; கடலில் தவறி விழுந்து பலி – 4 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சடலம்

WSH Council

சிங்கப்பூரில் வேலையிட விபத்தில் சிக்கி 59 வயதான ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிகரிக்கும் வேலையிட மரணங்கள் ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கேங்வே என்னும் இணைப்பு பாதை வழியாக கடக்கும்போது கடலில் விழுந்து அவர் உயிரிழந்தார் என கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு இன்பச் செய்தி கூறிய “முஸ்தபா சென்டர்”

இந்த செய்தியினை நேற்று திங்கள்கிழமை (ஜூலை 4) அன்று மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிட்டது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 17 ஆம் தேதி அன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர் தடுமாறி தண்ணீரில் விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அவரது உடல் மே 21 அன்று அதாவது நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.

யூனிட்ரஸ்ட் மரைன் சர்வீசஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் Eastern Bunkering A Anchorage கப்பலில் இந்த விபத்து நடந்தது.

அந்த ஊழியர் அலையன்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பது கூடுதல் தகவல்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், விபத்தின்போது ஊழியர் லைஃப் ஜாக்கெட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்ட பையை அணிந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனுடன் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை 28 வேலையிட மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

கட்டுமான ஊழியர்கள் அதிகம் இறப்பு… வேலையிட விபத்துகளுக்கு இதான் காரணம் – ஊழியர்கள் நச் பதில்!