பணத்தை காவலர்கள் திருடியதாக போலி நாடகம்: “வினேஷ் குமார் கணேசன்” என்பவருக்கு அபராதம், சிறை

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

தூக்கத்தில் இருந்து விழித்ததும், அருகில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் இருப்பதைக் கண்ட ஆடவர், தனது S$8,000 பணம் காணாமல் போய்விட்டதாகவும், அதற்கு அந்த அதிகாரிகளுக்கும் பங்கு உண்டு என்றும் குற்றம் சாட்டினார்.

ஆனால், அதன் பின்னர் அவர் சொன்னது போன்ற பணத்தொகையே அவரிடம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் மரணம்: இந்திய ஊழியர் மீது கொலை குற்றச்சாட்டு – முழு தகவல்

33 வயதான வினேஷ் குமார் கணேசன் என்ற அந்த ஆடவர், விசாரணை அதிகாரியிடம் பொய் கூறியது அன்றைய தினம் கண்டறியப்பட்டது.

இறுதியாக டிசம்பர் 13 அன்று, தாம் சொன்னதாக மலேசியரான அந்த ஆடவர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார்.

அவர், தான் குடித்துவிட்டு, களைப்பாக இருந்ததாகவும், அதிகாரிகள் எழுப்பியதால் விரக்தியடைந்ததாகவும் கூறினார்.

இதனால், எரிச்சல் அடைந்த அவர் பொய் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருக்கு நான்கு வார சிறைத்தண்டனையும் S$6,800 அபராதமும் விதிக்கப்பட்டது.

சென்னையில் பேயாட்டம் ஆடிய கனமழை: சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் பாதிப்பு