பிரபல நடிகர் விஜயகாந்த் காலமானார்!

பிரபல நடிகர் விஜயகாந்த் காலமானார்!
Twitter Image

 

 

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜயகாந்த் இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது 71.

சிங்கப்பூரில் வேலை.. “திருமணமான ஊழியர்களுக்கு” மட்டுமே அனுமதி என வைக்கப்பட்ட போஸ்டர்

பிரபல நடிகரும், தே.மு.தி.க. கட்சியின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவுக் காரணமாக, சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது.

கிட்டத்தட்ட 150- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள விஜயகாந்த் 2015- ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன் மூலம் கேப்டன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார் விஜயகாந்த்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?- விரிவான தகவல்!

விஜயகாந்த் மறைவு செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதனர். விஜயகாந்தின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.