விதிமுறைகளை மீறியதாக KFC கடை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

kfc_far_east_plaza
KFC

இரண்டு COVID-19 விதிமுறைகளை மீறியதாக, கென்டகி ஃபிரைடு சிக்கன் (KFC) நிர்வாகம் மீது இன்று (ஜனவரி 12) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இரவு 9.45 மணியளவில், ஃபார் ஈஸ்ட் பிளாசாவில் உள்ள கடையில் நான்கு வாடிக்கையாளர்களை சோதனை செய்யப்படாமல் அனுமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

விடுதியில் தகராறு: இறந்த தன் தாயை அவமானப்படுத்திய வெளிநாட்டு ஊழியரை குழவி கல்லால் தாக்கிய சக ஊழியருக்கு சிறை

சில்லறை உணவு&பான வணிகத்தை மேற்கொள்ளும் கடைகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு COVID-19 அறிகுறிகளுக்கான சோதனை செய்யப்படுவதை உறுதிசெய்வதற்கான நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நிறுவி செயல்படுத்த வேண்டும்.

அந்த நான்கு வாடிக்கையாளர்கள் இரண்டு நபர்களுக்கு மிகாமல் குழுவாக இருப்பதை உறுதிசெய்ய தவறியதாக அதே கடை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் பயணிகளுக்கான சோதனை முறை கடுமை: VTL விமான பயணிகளுக்கும் கடும் சோதனை