இரு பேருந்துகள் பயங்கர விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – 37 பேர் மருத்துவமனையில் அனுமதி

fatal bus crash Joo Koon death hospital
Singapore Bus Drivers Community/Facebook

ஜூ கூனில் (Joo Koon) இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) காலை இரண்டு தனியார் பேருந்துகள் விபத்துக்குள்ளானதில், பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் சிக்கிய 37 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி, CPM துறைகள், Work permit, S Pass ஊழியர்களுக்கு ஏப். 1 முதல் இது கட்டாயம்!

இன்று காலை 6.30 மணியளவில் ஜூ கூன் MRT நிலையத்தின் அருகில் உள்ள ஃபர்ஸ்ட் லோக் யாங் சாலை மற்றும் லோக் யாங் வே சந்திப்பில் இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.

இதில், பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் ஓட்டுநர் சிக்கியிருப்பதை சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) வீரர்கள் கண்டுபிடித்தனர்.

ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி SCDF வீரர்கள் அவரை வெளியே எடுத்தனர், ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மேலும், விபத்தைத் தொடர்ந்து மொத்தம் 37 பேர் Ng Teng Fong பொது மருத்துவமனை மற்றும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக SCDF கூறியது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் இன்று ஏப். 1 முதல் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் நுழைவு அனுமதி தேவை இல்லை – Travel update