நெருங்கும் பண்டிகைகள்- சென்னை, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), சென்னை, சிங்கப்பூர் இடையே வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்கள் மட்டும், இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் நூலக ஊழியர்கள் மாத சம்பளம் S$6,269… 50 சதவீதம் அதிகரிப்பு

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு குறைந்தபட்ச விமான பயணக் கட்டணமாக ரூபாய் 7,782 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கியுள்ள நிலையில், இந்த வழித்தடத்திற்கான விமான சேவைக்கான ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதங்கள் வரையிலான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் செல்லவிருந்த பயணியை விமான நிலையத்தில் பிடித்த அதிகாரிகள்…. அமெரிக்கா டாலர்கள் பறிமுதல்!

விமான பயண அட்டவணை, விமான பயண கட்டணம் உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.com/home என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.