உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டிகளை இலவசமாக காணுங்கள்: 300 அங்குல திரை… 500 பேர் வரை என்ஜாய் பண்ணலாம்

FIFA World Cup final 2022 free screenings
Pexels

தேசிய நூலகக் கட்டிடத்தில் உள்ள பிளாசா முதல்தளத்தில் FIFA உலகக்கோப்பை கால்பந்து ஆட்டங்களை இலவசமாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

500 பேர் வரை ஆட்டத்தை கண்டு கழிக்கும் வசதியை கொண்ட அங்கு, உலகக் கோப்பையின் இறுதி மற்றும் மூன்றாவது இடத்திற்கான பிளேஆஃப் ஆட்டங்களை காண முடியும்.

சிங்கப்பூரில் டிச.12 முதல் தடுப்பூசி போடப்படும் – யார்யாருக்கு..?

வரும் டிசம்பர் 17 மற்றும் டிசம்பர் 18 ஆம் தேதிகளில், சுமார் 300 அங்குல திரையில் ரசிகர்கள் போட்டிகளை இலவசமாகப் பார்க்க முடியும் என்று தேசிய நூலக வாரியம் (NLB) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி இரவு 11 மணிக்குத் தொடங்கும் இரண்டு போட்டிகளுக்கு முன்னதாகவே இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பு தொடங்கப்படும்.

அங்கு உணவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கால்பந்தாட்டம் தொடர்பான கேள்விகளும் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றிபெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

தேசிய நூலகக் கட்டிடம் 100 விக்டோரியா ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ளது.

4D லாட்டரியில் வெற்றி… குப்பையில் தூக்கி எறியப்பட்ட டிக்கெட் – ஓடி உதவிய ஊழியர்கள்