சிங்கப்பூர் Hampshire சாலையில் ஆடவர்கள் பலரிடையே சண்டை – போலீசில் புகார்

Fight breaks out at Hampshire Road
Stomp

சிங்கப்பூர் Hampshire சாலையில் கடந்த மார்ச் 27 அன்று இரவு ஆடவர்கள் பலர் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆடவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைக் கண்ட ஸ்டோம்ப் நிருபர் வெய் சியென், அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்டாம்பிடம் பகிர்ந்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு: குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் – இலவசம்!

அவர்கள் சண்டையிட்டுக் கொண்டனர் என்றும் ஒருவரையொருவர் இழுத்துத் தள்ளிக்கொண்டனர் என்றும் அவர் விவரித்தார்.

வெய், தாம் எடுத்த வீடியோக்களை காவல்துறையிடம் சமர்ப்பித்ததாகவும், காவல்துறை அவரின் புகாரை எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து அன்று இரவு 10.44 மணிக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மேலும் போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களுக்கு அதிக தேவை… தொடரும் கட்டுப்பாடுகள் – அதிக சம்பளம் கொடுக்க முதலாளிகள் ரெடி!