உணவில் பிளாஸ்டிக் பை…காய்கறி உணவு என்று மென்று சாப்பிட்ட நபர்!

Find plastic bag in foods
Find plastic bag in foods (PHOTO Credit: Stomp)

ஸ்டாம்பர் வாசகர் ஹேசல் என்பவர், நாசி பதாங் எனும் இந்தோனேசிய உணவை சாப்பிட்டு கொண்டிருந்தார்.

Haig ரோட்டில் உள்ள உணவகத்திலிருந்து வாங்கி சென்ற அந்த உணவை உண்ணும்போது வாயில் ஏதோ வித்தியாசமாக தென்படுவதை அவர் உணர்ந்தார்.

அலெக்ஸாண்ட்ரா சாலையில் டாக்ஸி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

முதலில் என்ன என்று அறியாமல் உடனே அதை அவர் துப்பினார், அது என்ன என்று உற்றுநோக்க, பிறகு தான் தெரிய வந்தது சிறிய பிளாஸ்டிக் பையை அவர் மென்றுகொண்டிருந்தார் என்று…

அவர் அதை காய்கறி உணவுவகை என்று நினைத்து மென்றுகொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “நான் மாட்டிறைச்சி மற்றும் காய்கறி உணவை $5க்கு வாங்கினேன், அதை நான் சாப்பிட ஆரம்பித்தபோது, ​​என் வாயில் எதோ வித்தியாசமான ஒன்றை உணர்ந்தேன்.”

“நான் உண்மையில் பிளாஸ்டிக் பையை சிறிது நேரம் மென்று தின்றேன், ஏனெனில் அதனை நான் ஆர்டர் செய்த காய்கறி உணவு என்று நினைத்தேன்.”

மேலும், “இன்னும் கடைக்கு செல்லவில்லை, அதனால் என்ன நடந்தது என்பது குறித்து அந்த கடைக்காரர்களுக்கு தெரிவிக்கவில்லை” என்றும் அவர் கூறினார்.

“நான் கடைக்கு சென்றாலும், நான் அவர்களிடம் இதனை பற்றி கூற வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் கோபமடைந்து என்னைத் திட்டுவார்களா?” என்றும் அவர் கூறினார்.

“நான் சுமார் மூன்று ஆண்டுகளாக இந்த கடையில் சாப்பிட்டு வருகிறேன், இதுபோன்ற ஒன்று எனக்கு முன்பு நடந்ததில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Junction 8 மாலின் மேற்கூரை பலகை ஆடவர் ஒருவர் தலையில் விழுந்து விபத்து

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…