உலக நாடுகள் வியந்து பார்க்கும் பின்லாந்தின் கல்விமுறையை சிங்கப்பூர் பின்பற்றுமா? – கல்வி அமைச்சர் சான் பேச்சு

Photo: Education Minister Chan Chun Sing Official Facebook Page

பின்லாந்தை உதாரணமாகக் காட்டி உலகக் கல்வியாளர்கள் விவாதம் செய்து வருகின்றனர்.12 ஆவது அனைத்துலகக் கல்வியாளர் ஆலோசனைக் குழு சிங்கப்பூரின் ரிட்ஸ் கார்ல்டன் மில்லேனியா ஹோட்டலில் விவாத நிகழ்வினை மூன்று நாள்களாக நடத்தியது.

கல்வி அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்தக் குழு இரண்டு முதல் மூன்றாண்டு வரையிலான இடைவெளியில் சந்தித்து சர்வதேச நாடுகளில் உள்ள கல்வி முறையை ஆராயும்.தற்போதைய குழுவில் சீனா,ஜப்பான்,ஆஸ்திரேலியா,அமெரிக்கா,மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப் படுத்தும் 15 கல்வியாளர்களும் ,தொழில்துறை தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

பள்ளிப்பருவத்தின் முதல் 15 ஆண்டுகளுக்கு தேவையானவற்றை சிங்கப்பூர் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.

பின்லாந்தில் நீக்குப்போக்கான வாழ்நாள் கற்றல் முறை பின்பற்றப்படுகிறது.ஏறக்குறைய அந்நாட்டின் மக்கள் தொகையைக் கொண்டுள்ள சிங்கப்பூரும் வாழ்நாள் கற்றலில் ஆர்வம் காட்டுபவர்களின் தேவையை நிறைவு செய்ய அதே போன்ற ஏற்பாட்டைச் செய்ய தயாராக உள்ளது.

மூன்று நாள் விவாதத்தின் போது பின்லாந்து கற்றல் ஏற்பாடுகளைப் பற்றிய சில தகவல்களும் வெளியிடப்பட்டன.”டிஜிவிசியோ 2030″ என்ற திட்டத்தின் கீழ் பின்லாந்தின் கல்வி செயல் படுகிறது.இந்த கற்றலின் போது மாணவர்களின் பின்னணி,அவர்களது முந்தைய கல்வி நிலை,வேலை அனுபவம் போன்றவை ஆராயப்படுவதாக பின்லாந்திலுள்ள ஆல்டோ பல்கலைகழகத்தின் தலைவர் பேராசிரியர் நீமெலா கூறினார்.