சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் Terminal-1ல் தீ பிடித்தது…

changi airport flights offers grand draw
Pic: Changi Airport/FB

2021 அக்டோபர் 6ஆம் தேதியன்று இரவு, சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் Terminal-1ல் திடிரென்று தீ பிடித்தது.

இந்த திடீர் தீ பிடிப்பால் 3 பொதுப் பேருந்துகள் சாங்கி விமான நிலைய பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் சென்றது.

உலகின் மிக ஆடம்பரமான நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு 8- வது இடம்!- ஆய்வில் தகவல்!

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தீ பிடிப்பு ஏற்பட்ட அன்று இரவு 9.50 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் விமான நிலையத்தின் அவசர சேவைப் பிரிவினர் தீயை அணைத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விமான நிலையத்தின் கீழ்த்தளத்தில் தீயால் ஏற்பட்ட புகையை வெளியேற்றியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

திடீரென இப்படி தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

மேலும் 24, 27, 53 ஆகிய பேருந்து சேவைகள் ‘Terminal-1, 2, ‘ஏர்போர்ட் புலவார்ட்’ பகுதிகளிலிருந்து இரவு 10.50 மணிக்கு செல்லும் என்பதும் குறிப்பிடதக்கது.

சிங்கப்பூரில் கொரோனாவால் புதிதாக மேலும் மூன்று பேர் உயிரிழப்பு