காபி கடை ஒன்றில் தீ விபத்து: 15 பேர் வெளியேற்றம் – விபத்துக்கான காரணம் என்ன?

PHOTO: SCDF/FACEBOOK

பிளாக் 29 சாய் சீ அவென்யூவில் (Block 29 Chai Chee Avenue) அமைந்துள்ள காபி கடை ஒன்றில் இன்று (மார்ச் 8) காலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக மூன்று கடைகள் பாதிப்புக்குள்ளானதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

‘நட்பில்லா’ நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரை சேர்த்துள்ளது ரஷ்யா!

அதன் பின்னர் அங்கிருந்து சுமார் 15 பேர் சுயமாக வெளியேறினர் என்றும், சிலர் தீயை அணைக்க உதவியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இன்று காலை 6.45 மணியளவில் இரண்டு தண்ணீர் ஜெட் மூலம் தீயை அணைத்ததாகவும் SCDF கூறியது.

முதற்கட்ட விசாரணையில், தீயினால் பாதிக்கப்பட்ட கடைகளில் ஒன்றில் அதிக சூடாக்கப்பட்ட சமையல் பொருளின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்று SCDF தெரிவித்துள்ளது.

அதாவது அடுப்பில் இருந்த சமையல் பொருட்களில் தீப்பிடித்ததை அடுத்து, அது அருகில் உள்ள புகை வெளியேற்றும் குழாயில் பரவியதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் SCDF கூறியுள்ளது.

#Exclusive: சிங்கப்பூரில் தமிழக ஊழியரை 3 மாதங்களாக காணவில்லை: “எப்டியாவது கண்டுபிடிச்சி தாங்க” கண்ணீருடன் பெற்றோர்!