ஜூரோங் ஈஸ்ட்டில் தீ விபத்து: குழந்தை ஒன்று மருத்துவமனையில் அனுமதி!

Fire at Jurong East flat
SCDF

பிளாக் 310 ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 32 இல் உள்ள HDB பிளாட்டின் ஐந்தாவது மாடியில் நேற்று திங்கள்கிழமை (ஜூன் 13) அன்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து ஒரு குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, மேலும் இதில் இரண்டு பூனைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

தீவு முழுவதும் செயின் வழிப்பறி திருட்டு… கைவரிசை காட்டிய நபர் – ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

தகவல் கிடைத்து SCDF தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே, இரண்டு நபர்கள் மற்றும் ஒரு குழந்தை அங்கிருந்து சுயமாக வெளியேற்றப்பட்டதாக நேற்று (ஜூன் 13) சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, அன்று காலை 7.50 மணிக்கு நடந்த இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக SCDF தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த குழந்தை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் அண்டை வீடுகளில் இருந்து சுமார் 15 பேர் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

வீட்டில் மீட்கப்பட்ட இரண்டு பூனைகளுக்கும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா’ விமான சேவை- ஜூன், ஜூலை, மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!