பாசிர் குடாங் தொழிற்சாலையில் தீ வெடிப்பு… சிங்கப்பூர் வரை தென்பட்ட தீப்பந்து!

Fire at Pasir Gudang factory fireball seen Singapore
Photo: Ashlynn Chua, Chris Oira

ஜோகூரில் உள்ள பாசிர் குடாங் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக உருவான நெருப்பு வளையத்தை அண்டை நாடான சிங்கப்பூரில் உள்ள பொதுமக்களும் கண்டனர்.

Tanjung Langsatல் உள்ள Lotte Ube செயற்கை ரப்பர் ஆலையில் ஏற்பட்ட தீ அந்த வெடிப்புக்கு வழிவகுத்தது என்று Taman Pasir Putih காவல் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் CNA விடம் கூறினார்.

Work pass அனுமதியில் வேலை பெற தந்திரமாக செயல்பட்ட வெளிநாட்டு ஊழியருக்கு சிறை – 19 ஊழியருக்கு நிரந்தர தடை

நேற்று வியாழன் (பிப்ரவரி 24) மதியம் ஏற்பட்ட தீயை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு நடவடிக்கைகள் அன்று இரவு 8.30 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வந்ததாக அவர் கூறினார்.

சிங்கப்பூரில், பாசிர் ரிஸ் மற்றும் பொங்கோலில் உள்ள பொதுமக்கள் பலர் தீப்பந்த காட்சிகளை கண்டதாக கூறப்படுகிறது.

இந்த தீ வெடிப்புக்கான காரணம் என்ன என்பது குறிப்பிடப்படவில்லை, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், இரண்டு ஊழியர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுமான கனரக வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வெளிநாட்டு ஊழியர்… பரிதாபமாக உயிரிழப்பு