ஷா சென்டரில் தீ: சுமார் 200 பேர் வெளியேற்றம் – சில உணவகங்கள் மூடல்

CNA

ஆர்ச்சர்டில் உள்ள ஷா சென்டரில், லெஸ் அமிஸ் குழுமத்தின்கீழ் (Les Amis Group) உள்ள ஸ்பானிஷ் உணவகத்தில் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 22) தீ விபத்து ஏற்பட்டது.

சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அதிகமான நபர்களை உணவகங்கள் மீண்டும் வரவேற்கும் முதல் நாளன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

விழிப்புடன் இருந்தாலும் இப்படியும் நீங்கள் மோசடி செய்யப்படலாம் – இந்திய ஊழியர்கள் உஷார்

இந்த சம்பவம் La Taperiaஇல் நடந்தது, விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, ஷா சென்டரில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் விசாரணைகள் முழுமையாக நடத்தப்படும் வரை மூடப்படும் என்று அந்த குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அதே போல, இன்றைய அனைத்து புதிய முன்பதிவுகளுக்கும் அனுமதி இல்லை என்றும், பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களையும் தொடர்பு கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

1 ஸ்காட்ஸ் சாலையில் காலை 10.15 மணியளவில் நடந்த இந்த தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.

விபத்து எப்படி ஏற்பட்டது?

அங்குள்ள மின்சுற்று பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பின்னர், தீயை SCDF வீரர்கள் அணைத்தனர்.

SCDFன் வருகைக்கு முன்னர் சுமார் 200 பேர் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும், இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் SCDF கூறியது.

சிங்கப்பூர் தெருக்களில் கிடக்கும் குப்பைகளை இரண்டு குழந்தைகளுடன் சுத்தம் செய்த பெண்!