ஆலையில் தீ: பெரிய இயந்திரத்தை ஊழியர்கள் பயன்படுத்தியபோது தீ பற்றி விபத்து

SCDF/FB

தெலோக் பிளாங்காவில் அமைந்துள்ள டெப்போ லேனில் உள்ள தொழிற்துறை ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

ஊழியர்கள், பெரிய காபி ரோஸ்டரை பயன்படுத்தி கொண்டிருந்தபோது திடீரென அதில் தீப்பிடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Work permit அனுமதியின்றி ஃப்ரீலான்ஸ் ஹோஸ்டஸ்களாக பணிபுரிந்த 25 பெண்கள்… அதிரடியாக கைது செய்தது போலீஸ்

செவ்வாய்கிழமை (மே 10) நடந்த சம்பவத்தில், விரைந்து வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) வீரர்கள் பாதுகாப்புகளை அமைத்து பக்கத்தில் உள்ள இடங்களுக்கு தீ பரவாமல் பாதுகாத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் காலை 10.15 மணிக்கு வந்தனர், அதற்குள் பிளாக் 4007ன் பக்கத்துக்கு இடங்களில் உள்ள சுமார் 20 பேர் சுயமாக வளாகத்தை விட்டு வெளியேறினர்.

சிப் ஹப் காபி டிரேடிங் நிறுவனத்தின் இரண்டு மாடி பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக SCDF தெரிவித்துள்ளது.

வழி தவறி காணாமல் போன 96 வயது மூதாட்டி… சிங்கப்பூரில் அலைந்து திரிந்து அவரை குடும்பத்துடன் சேர்த்த வெளிநாட்டு ஊழியர் – கைமாறு செய்ய தேடிவரும் குடும்பம்!