சிங்கப்பூரில் அதிகரிக்கும் தீ விபத்துக்கள்… மார்சிலிங் பிளாட்டில் தீ – மூவர் மருத்துவமனையில் அனுமதி

fire-marsiling-hdb

சிங்கப்பூரில் சமீப காலமாக தீ விபத்துகள் அதிகரித்து வருகிறது, அதன் வரிசையில் இன்று மே 15, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மற்றொரு தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து மார்சிலிங் ஹைட்ஸில் (Marsiling Heights) உள்ள HDB பிளாக்கின் மேல் தளங்களில் நடந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றை Mothership ஷிப் வாசகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

ATMல் பணம் எடுக்க நேரம் ஆனதற்கு கடும் சண்டை; இரத்தம் வழிந்தோட சண்டையிட்டு கொண்டவர்களை தூக்கிய போலீஸ் – வீடியோ

SCDF வீரர்கள் வருகைக்கு முன்னதாக பலத்த கூச்சல் சத்தம் கேட்டதாகவும், தனது அண்டை வீட்டில் ஏதோ சண்டை நடப்பதாக முதலில் நினைத்ததாகவும் பகிர்ந்து கொண்டுள்ளார் வாசகர்.

இன்று நள்ளிரவு 12 மணியளவில் பிளாக் 180C மார்சிலிங் சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக SCDF உறுதிப்படுத்தியது. அதாவது, 29 வது மாடியில் உள்ள வீட்டில் தீ ஏற்பட்டதாக அது கூறியுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த SCDF வீரர்கள் தண்ணீர் பீச்சியடிக்கும் ஜெட் கருவி மூலம் தீயை அணைத்தனர். அதன் பின்னர் மூன்று பேர் கேகே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதை SCDF விசாரணை செய்து வருகிறது.

“தனி ஆளாக சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல முடியாது, குரூப்பா தான் ஆள் வேணும்”… தந்திரமாக ஏமாற்றிய ஆடவர் – ஏமாந்துபோன அப்பாவி இளைஞர்கள்