சிங்கப்பூரின் Tuas-ல் உள்ள கழிவு எண்ணெய் பதப்படுத்தும் ஆலையில் திடீர் தீ விபத்து – மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆலையின் நிலைமை

fire accident in Tuas

சிங்கப்பூரின் Tuas பகுதியிலுள்ள Benoi Lane தொழிற்சாலையில் சனிக்கிழமை (April 23) ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டு உள்ளது.

தொழிற்சாலையின் கழிவு எண்ணையை பதப்படுத்தும் ஆலையில் தீ பிடித்ததாக (SCDF) தற்காப்புப் படை கூறியது. சனிக்கிழமை அன்று மாலை 4:45 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்ததாக தெரிவித்தது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கிட்டத்தட்ட 50 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 14 அவசர வாகனங்களை சம்பவ இடத்திற்கு SCDF அனுப்பியது. இதில் முழுநேர தேசிய சேவையாளர்கள்,தொழில் அதிகாரிகள் மற்றும் செயல்பாட்டுக்கு தயாராக உள்ள தேசிய சேவையாளர்களும் அனுப்பப்பட்ட 80 வீரர்களில் , அடங்குவர்.

எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக கடலிலிருந்து நீர் வழங்கும் வழித்தடத்தை வழங்க விரைவான தீயணைப்பு கப்பல் பயன்படுத்தப்பட்டது.கிட்டத்தட்ட மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு இரவு 7:30 மணியளவில் தீயணைக்கப்பட்டதாக SCDF முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

ஆலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை முதலில் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் நுரையை பயன்படுத்தினர். பின்னர் அவர்கள் தீயை அணைக்க வளாகத்திற்குள் ஆழமாக நுழைந்தனர்.

கடலுக்கு எதிரே உள்ள ஆலையின் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் தீயை அணைக்க கையடக்க விமானங்கள் மூலம் நுரையை பாய்ச்சி தீயை அணைக்க முயன்றனர் என்று SCDF அமைப்பு தெரிவித்தது.