டிக்கெட் விலை ரொம்ப கம்மி! சிங்கப்பூருக்கு விமான சேவையை அறிவித்துள்ள நிறுவனம்!

flight
Pic: Reuters

குறைந்த விலையில் விமான சேவை வழங்கும் மலேசியாவின் ஃபயர்ஃபிளை ஏர்லைன்ஸ் , COVID-19 தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதன் சேவையை இடைநிறுத்தியது.

தற்போது ஜூன் 13 ஆம் தேதி சிங்கப்பூருக்கான விமானங்களை மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளது.

சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்திற்கும் சிங்கப்பூரில் உள்ள செலிடார் விமான நிலையத்திற்கும் இடையே விமானங்கள் இயக்கப்படும்.

72 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் 72-500 டர்போபிராப் விமானத்தைப் பயன்படுத்தி தினமும் இரண்டு விமானங்கள் இயக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபயர்ஃபிளை ஏர்லைன்ஸ் அதன் சேவைகளை ஆண்டு இறுதிக்குள் படிப்படியாக அதிகரிக்கும் என்று கூறியது.

சிங்கப்பூர் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் இந்த ஆண்டு  இரண்டு மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளதால், இரு நாடுகளிலும் உள்ள சமூகங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும், அவற்றை இணைக்கும் பங்கை ஆற்றுவதற்கும் இது சரியான நேரமாக Firefly பார்க்கிறது என்று Firefly CEO Philip See கூறினார்.

ஃபயர்ஃபிளை மலேசியா ஏவியேஷன் குழுமத்தின் துணை நிறுவனமாகும். ஃபையர்ஃபிளை விமானத்திற்கான ஒரு வழி கட்டணம் $39 (119 ரிங்கிட்).

ஒவ்வொரு நாளும் இரண்டு விமான சேவைகள் சிலேத்தார் விமான நிலையத்திலிருந்து செயல்படும் என ஃபையர்ஃபிளை தெரிவித்தது.