மினுமினுக்கும் சாங்கி கடற்பகுதி! – மின்மினிகளின் ஒளியில் மிளிரும் கடலின் அலைகள்!

changi beach park firefly
சிங்கப்பூரின் சாங்கி கடற்பகுதியில் இரவு நேரத்தில் நட்சத்திரங்கள் மின்னுவது போன்ற காட்சி தோன்றுகிறது.இந்தக் காட்சியை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கணித,அறிவியல் உயர்நிலைப்பள்ளி மாணவர் குப்புசாமி வேல்முருகன் அரவிந்த் கண்டு வியப்படைந்தார்.
கடல் மின்னுவதை முதல்முறையாகப் பார்த்த அவருக்கு ஏற்பட்ட ஆச்சரியத்திற்கு எல்லை இல்லை.கடந்த மார்ச் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் அவரது நண்பர்களை அழைத்துக்கொண்டு சாங்கி கடற்கரைக்குச் செல்வதுண்டு.

அரவிந்த் அறிவியல் துறையைச் சேர்ந்த மாணவர் என்பதால் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி நண்பர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடற்கரைக்கு நண்பர்களுடன் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.சாங்கி கடற்கரைக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த அரவிந்துக்கு ஒரு நாள் கடல் மின்னுவது போலத் தோன்றியது.
அடுத்த நாள் சென்ற போது கடல் கூடுதல் பிரகாசத்துடன் தோற்றமளித்தது.கடலில் ஏன் இவ்வாறு மின்னுகிறது என்பது பற்றி தெரியாதவர்களுக்கு இது ஒரு விசித்திரமான நிகழ்வாகத் தெரியும்.
பல்வேறு மின்மினிகளின் காரணமாக கடல் இவ்வாறு தோற்றமளித்துள்ளது.ஆனால்,கடந்த மார்ச் மாதம் ஒரு வகை கடல் பாசி காரணமாக பாசிர் ரிஸ்,சாங்கி கடற்பகுதிகள் மின்னின.மின்மினிகளால் ஒளிவீசும் கடற்பகுதியின் காட்சியை முகநூல்,யூட்யூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.