“ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை,..” – வேலை நிறுத்த உத்தரவை மீறிய நிறுவனம்: S$115,500 அபராதம் விதித்த MOM

firm flouting stop-work order fine
Photo: Facebook/Joint Pacific Ocean Underwater Services

வேலை நிறுத்த உத்தரவை மீறிய நிறுவனம் ஒன்றிற்கு S$115,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) கடந்த ஆக.10 அன்று தெரிவித்தது.

PO Challenger என்ற முக்குளிப்பு படகில் MOM ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, Joint Pacific Ocean Underwater Services (JPO) நிறுவனத்துக்கு 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று வேலை நிறுத்த உத்தரவு வழங்கப்பட்டது.

லிட்டில் இந்தியாவில் சிறுயை நாசம் செய்ததாக சிக்கிய மதுக்கடை உரிமையாளர்

ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அந்நிறுவனத்தால் முக்குளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று MOM வேலை நிறுத்த உத்தரவை வழங்கியது.

வேலை நிறுத்த உத்தரவு அமலில் இருந்தபோதிலும், JPO அதன் வணிக நடவடிக்கைகளைத் தொடர்ந்தது அமைச்சகத்தால் கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக அந்நிறுவனத்துக்கு S$115,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“பாஸ்போர்ட், ஒர்க் பெர்மிட்டை காட்டு” – பணிப்பெண்ணை நாசம் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு 18 ஆண்டு தடுப்பு காவல், 12 பிரம்படி