சிங்கப்பூரில் முதல் மேம்படுத்தப்பட்ட NEL ரயிலின் சேவை இன்று முதல் தொடக்கம்!

Pic: LTA

சிங்கப்பூரில் முதல் மேம்படுத்தப்பட்ட நார்த் ஈஸ்ட் லைன் (NEL) ரயில் இன்று (பிப்.28) முதல் அதன் சேவையை தொடங்குகிறது.

செங்காங்கில் உள்ள SBS Transit ரயில் பணிமனையில், சுமார் 116 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான செலவில் ரயில்களுக்கு புதுப்பிப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

25 ரயில்களில் முதல் ரயில் அதன் திட்டமிடப்பட்ட mid-life மேம்படுத்தலை முடித்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் முகநூலில் தெரிவித்துள்ளது.

அனைத்து விமானங்களையும் காலவரையின்றி நிறுத்திவைத்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும்!

புதுப்பிக்கப்பட்ட ரயிலில் பல சிறப்பம்கள் இடம் பெற்றுள்ளனன. ரயிலின் இருக்கைகள் மற்றும் கைப்பிடிகள், புதிய LED விளக்குகள் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன. நான்கு பெட்டிகளில், நிற்கும் பயணிகள் சாய்ந்துகொள்வதற்கான வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

பயணப் பாதைக் குறிப்புகளுக்கான ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டு, மின்னிலக்க முறையில் காட்டப்படுகின்றன. நிலையத்தில் ரயில் நிற்கும்போது எந்தப்பக்கம் கதவு திறக்கும் என்பதைக் காட்டும் வசதியும் இடம்பெற்றுள்ளது.

மேலும், ரயிலின் செயல்திறனை கண்காணிக்கும் கட்டமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. முதல் ரயிலைத் தொடர்ந்து பணிமனையில் அடுத்த ரயிலுக்கான புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு நேரத்தில் ஒரு ரயில் என்ற அடிப்படையில் மொத்தம் 25 ரயில்களுக்குமான மேம்பாட்டுப் பணிகள் 2024ம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்துகளில் அதிகரிக்கும் மானபங்கப் புகார்கள்.!