இந்தியாவில் ஐந்து நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து ‘Non- VTL’ விமான சேவையை வழங்கி வரும் ஸ்கூட்!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

இந்தியாவில் திருச்சி, கோவை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், அமிர்தசரஸ் ஆகிய ஐந்து நகரங்களில் சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் (FlyScoot). இந்த விமான சேவையானது ‘Non- VTL’ ஆகும்.

சிங்கப்பூர் அதிபர், பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசிய வியட்நாம் அதிபர்!

குறிப்பாக, குறைந்த கட்டணத்தில் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான சேவையை வழங்கி வருகிறது. திருச்சி, கோவை, திருவனந்தபுரம், அமிர்தசரஸ், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து இந்திய நகரங்களுக்குமான விமான பயணச் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வரும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸின் https://www.flyscoot.com/en என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்வழி ‘VTL’ பயணத் திட்டம் மூலம் பாத்தாம் தீவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த பயணிகள்!

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் அனைவரும் கட்டாயம் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கொரோனா நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பயணிகளை விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.