சிங்கப்பூர் வங்கிகளில் வட்டி விகிதம் அதிகரிப்பு – நீண்ட வரிசையில் நின்ற வாடிக்கையாளர்கள்

fixed-deposit-interest-rates high
Shin Min Daily News Facebook

சிங்கப்பூரின் முக்கிய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதால், பொதுமக்கள் அதனை வரவேற்றுள்ளனர்.

கடந்த செப். 9, வெள்ளிக்கிழமை காலை வங்கிகள் முன்பு நீண்ட வரிசைகள் காணப்பட்டன. முக்கியமாக அவர்கள் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான சமீபத்திய வட்டி விகிதங்களைப் பற்றி அறிய அங்கு கூடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம் உயர்வு – அக்.1 முதல் அமல்

தோ பாயா சென்ட்ரலில் உள்ள யுனைடெட் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்கு வெளியே சுமார் 20 பேர் வரிசையில் காணப்பட்டனர்.

அதே போல, DBS வங்கி, OCBC வங்கி மற்றும் தோ பாயா மற்றும் பிஷானில் உள்ள Maybank ஆகியவற்றில் வரிசையில் பொதுமக்கள் காணப்பட்டனர்.

பிக்சட் டெபாசிட் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த பணத்திற்கும் உத்தரவாதமான வட்டியை பெற முடியும்.

அதுவும் குறிப்பாக வட்டி விகிதம் அதிகம் என்ற செய்தியை அறிந்த மக்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஒன்று கூடினர்.

பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 2.7% வட்டி விகிதம் அதிகரித்துள்ளதாகவும், சில வங்கிகளில் சுமார் 4 மணி நேரம் பொதுமக்கள் வரிசைகளில் நின்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சம்பளமின்றி தவிக்கும் 14 தமிழக ஊழியர்கள்: கைவிரித்த கட்டுமான நிறுவனம்… சொந்த ஊர் திரும்ப வழியை தேடும் சோகம்