சிங்கப்பூரில் வெளுத்து கட்டும் கனமழை: பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… வெள்ள அபாய எச்சரிக்கை!

Mothership

சிங்கப்பூரில் இன்று புதன்கிழமை (மார்ச் 2) பெய்த கனமழையை தொடர்ந்து பல்வேறு இடங்களில் திடீர் வெள்ள அபாயம்  ஏற்பட்டுள்ளது என்று PUB எச்சரித்துள்ளது.

தஞ்சோங் பகார் சாலை மற்றும் கிரேக் சாலையில் மதியம் 3.50 மணி நிலவரப்படி வடிகால் மற்றும் கால்வாய்களில் நீர்மட்டம் 90 சதவீதத்தை எட்டியது.

சிங்கப்பூரில் வேலையை தக்க வைக்க பணம்… சொந்த நாடு திரும்பிய அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள்!

அதே போல, சோவா சூ காங் அவென்யூ 1 மற்றும் டெக் வை லேன் ஆகிய இடங்களிலும் மாலை 4.10 மணி நிலவரப்படி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்று சமூக ஊடகப் பதிவுகளில் தேசிய பயனீட்டு கழகம் (PUB) தெரிவித்துள்ளது.

மேலும், மாலை 4.12 மணி நிலவரப்படி உட்லண்ட்ஸ் சாலை மற்றும் கிராஞ்சி விரைவுச் சாலையில் நீர்மட்டம் 90 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.

அப்பர் செராங்கூன் சாலைக்கு அருகில் உள்ள Puay Hee Avenue மற்றும் Siak Kew Avenue ஆகிய இடங்களிலும் நீர்மட்டம் 90 சதவீதத்தை தாண்டியுள்ளது.

Aljunied சாலை, அப்பர் பாயா லெபார் சாலை மற்றும் Sungai Tongkang மற்றும் ஆங் மோ கியோ அவென்யூ 5 ஆகிய இடங்களில் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளை அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று பல பகுதிகளில் மாலை 4.15 மணி முதல் 5.30 மணி வரை கனமழை பெய்யும் என்று PUB முன்னதாக குறிப்பிட்டது.

வெளிநாட்டு பணிப்பெண்கள், பிற Work permit உடையோருக்கு ஆறு மாத மருத்துவப் பரிசோதனை நிறுத்தி வைப்பு!