நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானம்…..பயணிக்கு தேள் கடி!

Photo: Air India

 

டாடா குழுமத்துக்கு (TATA Group) சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் (Air India) AI 630 என்ற எண் கொண்ட விமானம், கடந்த ஏப்ரல் மாதம் 23- ஆம் தேதி அன்று பயணிகளுடன் நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, நடுவானில் விமானம் பறந்துக் கொண்டிருந்த நிலையில், பெண் பயணி ஒருவரை தேள் கடித்தது.

பாசிர் ரிஸ் பிளாட்டில் தீ: 40 பேர் வெளியேற்றம்

இதனால் அந்த பயணி வலியால் விமானத்தில் துடித்தார். இது குறித்து மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் விமான நிலையத்தின் ஆம்புலன்ஸில் தயார் நிலையில் இருந்தனர். இந்த நிலையில், அந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. உடனடியாக, விமானத்திற்குள் நுழைந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், “விமான பயணியைத் தேள் கடித்தது துரதிர்ஷ்டவசமானது. மருத்துவமனையில் இருந்து அந்த பயணி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்; அவர் தற்போது நலமாக இருக்கிறார். பயணி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது எங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் அவருடன் உடனிருந்தனர். அந்த பயணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்” என்றார்.