‘திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை’- அதிரடி சலுகையை அறிவித்தது ஸ்கூட் நிறுவனம்!

tamilnadu worker death from singapore scoot
Photo: Flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (FlyScoot) சிங்கப்பூரில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு VTL மற்றும் Non-VTL விமான சேவையை குறைந்த கட்டணத்தில் தொடர்ந்து வழங்கி வருகிறது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆஸ்திரேலியா- வெள்ள நிவாரணப் பணிகளுக்கு கைக்கொடுக்கும் சிங்கப்பூர்!

ஸ்கூட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்கூட் நிறுவனத்தின் VTL சேவையில், மெல்போர்ன், மெர்லின், அதன்ஸ், ஹனோய், அமிர்தசரஸ், சியோல், பாங்காக் உள்ளிட்ட மேலும் 8 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விமான பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

இந்த நிலையில், திருச்சி, அமிர்தசரஸ் உள்ளிட்ட 19 நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு VTL விமான சேவையில் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம். இந்த 19 நகரங்களில் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள சிறப்பு கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தை முன்னிட்டு, இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து மார்ச் 27 முதல் மீண்டும் தொடங்குகிறது!

அதன்படி, கோலாலம்பூர் (Kuala Lumpur), பாங்காக் (Bangkok), சியாங் மை (Chiang Mai), கிராபி (Krabi), புக்கெட் (Phuket), பெர்லின் (Berlin), மெல்போர்ன் (Melbourne), சிட்னி (Sydney), கோல்டு கோஸ்ட் (Gold Coast), பெர்த் (Perth), சியோல் (Seoul), ஹோ சி மின்ஹ் சிட்டி (Ho Chi Minh City), ஹனோய் (Hanoi), அதன்ஸ் (Athens), அமிர்தசரஸ் (Amirtsar), கோவை (Coimbatore), திருவனந்தபுரம் (Trivandrum), திருச்சி (Trichy), விசாகப்பட்டினம் (Visakhapatnam) ஆகிய 19 நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் பயணிகள் இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இச்சலுகை பயண டிக்கெட் விற்பனை மார்ச் 4 முதல் தொடங்கி மார்ச் 13- ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விமான சேவை VTL ஆகும்.

விமான பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.