சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் கூட்டத்தால் நெரிசல் – ரம்ஜான் மற்றும் தொழிலாளர் தின விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டம்

singapore to bangkok

சிங்கப்பூரர்களுக்கு ஹரி ராய புசா மற்றும் தொழிலாளர் தினம் காரணமாக ஏப்ரல் 30 முதல் மே 3 வரை சராசரியை விட நீண்ட வார இறுதி இருந்தது. Covid-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டிருப்பதால் பாங்காக்கிற்கு செல்ல சிறந்த இடங்களில் சிங்கப்பூர் ஒன்றாகும்.

கடந்த சனிக்கிழமை (April 30) சிங்கப்பூரிலிருந்து பாங்காக்கிற்கு பயணித்த சிங்கப்பூரர் ஒருவர் இரு நகரங்களின் விமான நிலையங்களிலும் சிங்கப்பூரர்களின் கூட்டம் நிறைந்திருப்பதை தெரிவித்தார்

சாங்கி விமான நிலையத்தில் போர்டிங் கேட்டில் பயணிகளின் நிலைமையை டிக் டாக்கில் வீடியோவாக பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வார இறுதியில் Sg முழுவதும் Bkk-க்கு பறக்கிறதா? என்பது வீடியோவின் தலைப்பு ஆகும்.

போர்டிங் கேட்டில் விமானத்தில் ஏறுவதற்கு காத்திருப்பவர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது வீடியோவில் தெரிந்தது. மேலும் நுழைவுவாயிலில் அனைத்து இருக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.இவற்றில் பெரும்பாலும் இளைஞர்கள் பயணம் செய்ததாக Quick scan தெரிவித்தது.

அதே விமானத்தை வீடியோ எடுத்த நபர் அந்த விமானம் “House Full” ஆக இருந்ததாக பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் மற்றொரு டிக் டாக் பயனர் அன்றையதினம் விமானநிலையத்தில் பல்வேறு நாடுகளுக்கு பயணித்த பயணிகளின் கூட்டத்தை பார்த்ததாக தெரிவித்தார்.

பாங்காக் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கிய பிறகு ,விமானத்திலிருந்து இறங்கியபோது விமான நிலையத்தில் பயணிகளின் வரிசைகள் எவ்வளவு மோசமானதாக இருந்தது என்பதை மற்றொரு டிக் டாக் பயனர் வீடியோ எடுத்தார்.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு சிங்கப்பூருக்குள் நுழைய ஏப்ரல் 26 முதல் Covid-19 பரிசோதனைகள் தேவையில்லை என்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்