முகநூலில் எச்சரிக்கை ! – இந்தப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்; கனமழையால் ஏற்படும் திடீர்வெள்ளம்!

AFP

சிங்கப்பூரில் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சுமார் 23 இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.பலத்தமழை காரணமாக அந்த இடங்களில் உள்ள வடிகால்கள் மற்றும் கால்வாய்களில் நீர்மட்டம் 90 விழுக்காட்டை எட்டிவிட்டதாகக் கழகம் கூறியது.

மழைவெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதைச் சுமார் ஒரு மணி நேரத்திற்குத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் வடக்கு,கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று முகநூல் பக்கத்தில் கழகம் தெரிவித்திருந்தது.

  • பிடோக் கேனல் (அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட்)
  • பிடோக் கேனல் (ஜாலான் செம்பாகா குனிங்)
  • பிடோக் ரோடு/ பிடோக் கார்டன்
  • பிடோக் கேனல் (அப்பர் சாங்கி ரோடு)
  • ஜாலான் நிபா -ஹவ்காங் அவென்யூ 8
  • லங்சாட் ரோடு/ லோரோங் 105 சாங்கி
  • ஜாலான் சீவியூ
  • ஹேப்பி அவென்யூ
  • அல்ஜூனிட் ரோடு
  • ஹேப்பி அவென்யூ நார்த்
  • Sg சிராங்கூன் பிரான்ச் (ஹவ்காங் அவென்யூ 7)
  • தெம்பனிஸ் ரோடு/ ஹவ்காங் அவென்யூ 3
  • Sg டொங்காங் (லோரோங் புவாங்கோக்)
  • Sg டொங்காங் (இயோ சூ காங் ரோடு)
  • புவே ஹீ அவென்யூ/ சியாக் கியூ அவென்யூ
  • ஜாலான் லோகம்/ அப்பர் பாயா லேபார் ரோடு
  • லோரோங் ஒங் லாய்/ லோரோங் லியூ லியன்
  • வான் தோ அவென்யூ
  • லோரோங் 2 தோ பாயோ (பிராடல் MRT)
  • அப்பர் பாயா லேபார் ரோடு
  • லோரோங் கம்பிர் (லெ கம்பிர்)
  • செலேத்தார் ரோடு/ நேரம் ரோடு