ஆர்டர் செய்த உணவை மாற்றி கொடுத்த ஊழியர் – கோபத்தில் சூடான சூப்பை ஊழியர் மீது கொட்டிய ஆடவருக்கு அபராதம்!

TODAY

சிங்கப்பூரில் ஆடவர் ஒருவர் சூடான சூப்பை உணவக உதவியாளர் மீது கொட்டியதால் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த உதவியாளர் Fried bean curd skin உணவுக்கு பதிலாக, Fried bean curd செய்து கொடுத்ததற்காக அவர் கோபம் அடைந்தார் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் குறைந்த சம்பளம் பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் 3 முக்கிய பிரச்சனைகள் – அதற்கான தீர்வுகள்!

சிங்கப்பூர் ஆயுதப் படையில் (SAF) பணிபுரியும் கெல்வின் டான் சுன் லாங்கிற்கு கடந்த பிப். 18 அன்று நீதிமன்றத்தில் அதிகபட்சமாக S$5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

என்ன நடந்தது?

ஜூன் 6, 2020 அன்று மதியம் 1 மணியளவில் உட்லண்ட்ஸ் டிரைவ் 71ல் உள்ள காபி கடைக்குச் சென்ற டான்,  உணவை ஆர்டர் செய்தார்.

சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, டான் தனது ஆர்டரைப் பெறுவதற்காக கடைக்கு திரும்பினார். 53 வயதான சிங்கப்பூர் உணவக உதவியாளர் தாம் தவறான உணவை தயார் செய்துவிட்டதை உணர்ந்தார்.

இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட தொடர் வாதத்தை அடுத்து கோபமடைந்த கெல்வின் அருகே இருந்த சூடான சூப் நிரம்பிய பிளாஸ்டிக் பையை எடுத்து உதவியாளர் மீது வீசினார்.

அதிலிருந்த சூடான சூப் அவர் மீது ஊற்றி தீக்காயத்தை ஏற்படுத்தியது என்று கூறப்பட்டுள்ளது.

28 வயதான அவர் இந்த மோசமான செயலை செய்து அவரை காயப்படுத்திய குற்றச்சாட்டில் தனது குற்றத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 13 அன்று ஒப்புக்கொண்டார்.

S$1,000 & வேலை அனுமதி அடங்கிய பர்ஸை தொலைத்து கலங்கிய வெளிநாட்டு ஊழியர்… கடவுள் போல வந்து உதவிய சக ஊழியர்!