உணவு விநியோகிக்க சென்ற போது நேர்ந்த சோகம் – மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட ஓட்டுனர் பிழைத்தாரா!

punggol accident

புங்கோலில் உள்ள வாட்டர்வே பாயின்ட் ஷாப்பிங் மால் வெளியே நிகழ்ந்த போக்குவரத்து விபத்தில் சிக்கிய 54 வயதான GRABFOOD உணவு விநியோக ஓட்டுனர் இறந்தார். ஜூன் 24 அன்று சாலையோரம் நிகழ்ந்த இவ்விபத்தில் அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து தங்களுக்கு காலை 9.50 மணியளவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து வாட்டர்வே பாயின்ட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பகுதிக்கு அருகமையில் நடந்துள்ளது. சைக்கிளில் சென்று கொண்டிருந்த உணவு விநியோக ஓட்டுனர் மீது அந்த நேரத்தில் லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளாக்கியது.

பின்னர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, செல்லும் வழியில் அந்த நபர் சுயநினைவுடன் இருந்துள்ளார் என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. 65 வயதுடைய லாரி ஓட்டுனர் காவல் துறை விசாரனைக்கு ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளனர். விபத்து தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் பரவியது.  அதில் பல உணவு விநியோக சக ஓட்டுனர்கள் அந்த நபருக்கு உதவுவதையும் அவரைச் சுற்றி நிற்பதையும் காண முடிந்தது.

மேலும் GRABFOODஇன் செய்தித் தொடர்பாளர், உதவி வழங்குவதற்காக இறந்தவரின் நெருங்கிய உறவினர்களைத் தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார்.