கழிவறையின் கதவுக்கு அடியில் செல்போனுடன் நீட்டப்பட்ட கை! – அலறிய பெண்கள்! சிக்கிய இளைஞர்!

ladys toilet man
பெண்களின் கழிவறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக உணவு விநியோகம் செய்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.முஹம்மது ஃபைஸ் முகமது யாசின் என்ற 23 வயது இளைஞர் ஜனவரி 3,2023 அன்று அவரது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
மே 30, 2021 அன்று கீட் ஹாங் சமூக கிளப்பில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.உணவு தயாரிக்கும் வரை ஊனமுற்றோருக்கான கழிப்பறையைப் பயன்படுத்தி காத்திருந்த முகம்மது பின்னர் பெண்கள் கழிப்பறையில் இருந்து சத்தம் கேட்டு அத்துமீறி கழிவறைக்குள் நுழைந்தார்.
கதவின் அடியில் போனை நீட்டி வீடியோ பதிவு செய்ய ஆரம்பித்தார்.கழிவறைக்குள் இருந்த பெண் கையைப் பார்த்ததும் சத்தம் போட்டு கத்தினார்.பீதியடைந்த முகம்மது உடனடியாக ஆண்கள் கழிப்பறையில் மறைந்தார்.ஆனால்,பாதிக்கப்பட்ட பெண் வெளியே வந்ததும் அவரை அடையாளம் கண்டார்.

அன்று காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட முகம்மது மறுநாள் பிணையில் விடுதலை பெற்றார்.அதற்குப் பிறகும் திருந்தாத முகம்மது,டிசம்பர் 13, 2021 அன்று இரவு, கீட் ஹாங் சமூக கிளப்பில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குச் சென்றார்.
உடனடியாக செல்போனில் இருந்த கேமராவை இயக்கி கதவின் மேல் வைத்து கழிவறையைப் பயன்படுத்தும் பெண்களை கவனித்தார்.உஷாரான பெண் கால்களால் செல்போனை உதைத்தார்.அங்கிருந்து தப்பி ஓடிய முகம்மதுவை CCTV உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது மூன்றாவது வீடியோ சிக்கியது.நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட முகம்மது தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க விரும்புவதாகக் கூறி சுருக்கமாக உரையை முடித்தார்.